தமிழ்நாட்டில் மூன்று மாதங்களில் 51 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு அதன் செலவுகளை சமாளிப்பதற்காக ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் கடன் பாத்திரங்கள் மூலமாக 51,000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்து இருக்கின்றது எனவும் நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் இலக்கை விட கணிசமாக அதிகரித்திருப்பது கவலை அளிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் வருவாய் ஒப்பீட்டு அளவில் சிறப்பாகவே உள்ளது எனக் கூறிய அவர் தாமதிக்கப்பட்ட அளவுகளுக்காக கடைசி மூன்று மாதங்களில் அதிக நிதி ஒதுக்கப்பட வைப்பதுதான் அதிகளவில் கடன் வாங்க காரணமாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மீளமுடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி கொள்ளக்கூடாது எனவும் கடன் சுமையை கணிசமாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.