ஒப்பந்த செவிலியர்களுக்கு இதை செய்தால் பணி நிரந்தரம் செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செவிலியர்களுக்கு தற்போது இருக்கும் காலி பணியிடங்களில் பணி நிரந்தர வாய்ப்பு குறைவு எனவும் தங்களின் ஆவணங்களை சரி செய்து கொண்டால் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்புள்ளது எனவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒப்பந்த செவிலியர்களின் தற்போதைய நிலைக்கே முழு காரணமானவர்களே முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் செயல்படுவதாக தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் வருடம் அதிமுக ஆட்சியில் இந்தத் துறைக்கு 2345 செவிலியர்கள் பணியில் சேர்பதற்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் 2323 பேர் பணியில் சேர்க்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். கடந்த ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தாக்கத்தினால் எந்த ஆவணங்களையும் கேட்காமல் புதிதாக செவிலியர்களை வேலைக்கு எடுத்ததாக தெரிவித்தார்.

செவிலியர்களுக்கு தற்போது இருக்கும் காலி பணியிடங்களில் பணி நிரந்தர வாய்ப்பு குறைவு எனவும் தங்களின் ஆவணங்களை சரி செய்து கொண்டால் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார். மற்ற கட்சி தலைவர்கள் மருத்துவத் துறையின் மீது இருக்கும் அன்பு எங்களுக்கும் உள்ளது, யாரும் பாதிப்படைய விடமாட்டோம் எனவும் தெரிவித்தார். இந்த தவறுக்கு தெரிந்தோ தெரியாமலோ காரணமாய் உள்ளவர்களே பரிகாரம் தேடிக் கொள்ளாமல் எதுவும் தெரியாததுபோல எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விட்டது கேலியாக இருப்பதாக தெரிவித்தார்