2022-ல் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வசூல் குறித்து மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 17. 57 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரலாற்றிலேயே அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஏப்ரலில் ஜிஎஸ்டி வருவாய் 1.68 லட்சம் கோடியாக இருந்ததாகவும் கடந்த ஆண்டு டிசம்பரில் ஜிஎஸ்டி வருவாய் 1.49 கோடியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மத்திய சரக்கு சேவை வரியாக 26 ஆயிரத்து 711 கோடியும் மாநில சரக்கு சேவை வரியாக 33 ஆயிரத்து 357 கோடியும் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக 78 ஆயிரத்து 434 கோடியும் வசூல் ஆகியுள்ளது. செஸ் வரியாக ரூபாய் 11 ஆயிரத்து 5 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வர்த்தக நடவடிக்கை மூலமான வருவாய் 2021 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 18% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மாதாந்திர வருவாய் ரூபாய் 1.4 லட்சம் கோடியை கடப்பது இது பதினோராவது முறையாகும்.

முக்கியமாக கடந்த ஆண்டு மார்ச்-ல் இருந்து தொடர்ந்து பத்து மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் ரூபாய் 1.4 லட்சம் கோடிக்கு அதிகமாகவே உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் 7.6 கோடி ஈபி ரசீதுகள் உருவாக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் 7.9 கோடி ஈபி ரசீதுகள் உருவாக்கப்பட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 2022 ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 17.57 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.