பிற்பகல் 3 முதல் இரவு 9 வரையிலான நேரம் தான் சாலைகளில் பயணிக்க மிகவும் அபாயகரமான நேரம் என்று மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்த நேரத்தில் தான் 40% சாலை விபத்துகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே போல, நள்ளிரவு 12 முதல் காலை 6 வரையிலான பயணங்கள் பாதுகாப்பானவை. இதில் 10% விபத்துகளே பதிவாகியுள்ளன.

கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் 4,12,432 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. இந்த விபத்துகளில் மொத்தம் 1,53,972 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து சாலை விபத்துகளில் 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர். அதன் பிறகு கடந்த 2019-ம் ஆண்டு விட கடந்த 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகள் 8.1 சதவீதம் குறைந்துள்ளதாகவும், காயங்கள் 14.8 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளினால் ஏற்படும் விபத்துகள் 1.9 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விதிகளை கடைப்பிடித்து பயணம் மேற்கொள்ளுங்கள்.