உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஒன்பது ஆண்டுகளாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட 60 நாட்களிலேயே, தனது கணவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும், மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து 20,000 ரூபாய் பணத்தை எடுத்ததே இந்த மோதலுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
பணத்தை எடுத்த ஆத்திரத்தில், அந்தப் பெண் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துவிட்டு, எதற்கும் தெரியாமல் இருக்கச் சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டுத் தற்கொலை என நாடகமாடியுள்ளார். இந்தக் கொடூரச் செயல் குறித்துப் போலீஸார் நடத்திய விசாரணையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் அது தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை என்பது அம்பலமானது.
ஆன்லைன் சூதாட்டம் ஒரு மனிதனைச் சிதைக்கும் என்றால், ஆத்திரம் ஒரு பெண்ணை இப்படி ஒரு கொடூரக் கொலையாளியாக மாற்றியுள்ளது. 9 வருடக் காதலை ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், தன் கணவனையே குடும்பத்துடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய அந்தப் பெண் இப்போது சிறைக்கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். பணமும், கோபமும் ஒரு அழகான வாழ்க்கையை எப்படிச் சுடுகாடாக மாற்றியுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.
