அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சீனாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனா செல்வது இதுவே முதல்முறை என்பதால், இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த பயணத்தின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்கும் டிரம்ப், வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து விரிவாகப் பேச உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்ற எதிர்பார்ப்பு உலக அளவில் நிலவி வருகிறது.
தற்போது நீடித்து வரும் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாடு போன்ற இக்கட்டான சூழலில் இந்தப் பயணம் நடைபெறுகிறது.
மேலும், தைவான் விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைத் தணிப்பது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தச் சந்திப்பு ஒரு பாலமாக அமையும் என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
