உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் கடந்த 16 மாதங்களில் 80-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு HIV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவ கல்லூரியின் ஆன்டி ரெட்ரோ வைரல் தெரபி மையம் வெளியிட்ட அறிக்கையின் படி பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணிகள் 81 பேருக்கு எச்ஐவி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 35 பெண்களுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் குழந்தைகளுக்கு 16 மாதங்கள் கழித்து HIV பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.