கணவனை பிரிந்து வாழும் பெண்கள், விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், 18 முதல் 59 வயது வரை உள்ள விதவைகள் மற்றும் ஏழைப் பெண்களுக்கான பென்ஷன் திட்டத்தை டெல்லி அரசு அறிமுகம் செய்துள்ளது. இது போன்ற பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை நன்றாக வாழ்வதற்கு போதுமான வசதிகள் இல்லாததால் அவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பண உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் மாதம் தோறும் தகுதியான பெண்களுக்கு அரசிடமிருந்து 2500 ரூபாய் பென்ஷன் தொகை வழங்கப்படும். இதில் பென்ஷன் பெற விண்ணப்பதாரர்கள் டெல்லியில் வசிப்பவராக இருக்க வேண்டும். மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற திட்டங்கள் இருக்கிறது. இதற்கு விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும். டெல்லியில் உள்ள ஏதேனும் ஒரு வங்கியில் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும்.

இ-டிஸ்ட்ரிக்ட் போர்டலில் (டெல்லி) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

https://edistrict.delhigovt.nic.in/ என்ற உள்நுழையவும்.ஆவணத்தைத் தேர்ந்தெடுக்கவும் – ஆதார் அல்லது வாக்காளர் ஐடியைக் கிளிக் செய்யவும்.

உங்கள் ஆதார் அட்டை எண்/வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிடவும்.

கேப்ட்சாவை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.