பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ தனது 80வது வயதில் ஏழாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். முன்னதாக இவர் தனது மூன்று மனைவிகளை விவாகரத்து செய்த நிலையில், டிஃப்பனி சென் என்பவரை காதலித்து வருகிறார். டிஃப்பனி சென் மூலம் தற்போது இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிகிறது.

80 வயதில் ஏழாவது குழந்தைக்கு தந்தையான ராபர்ட்டுக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராபர்ட் டி நீரோ 2 முறை ஆஸ்கர் விருது வென்றுள்ளார்.