கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவருக்கு 6 பந்துகள் என்பது விதிமுறை. ஆனால், நியூசிலாந்தில் நடந்த ஒரு முதல் தரப் போட்டியில் ஒரே ஓவரில் 77 ரன்கள் எடுக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி வெலிங்டன் மற்றும் கேன்டர்பரி அணிகளுக்கு இடையே நடந்த ஷெல் டிராபி போட்டியில் தான் இந்த அதிசயம் நிகழ்ந்தது.
போட்டியின் கடைசி நேரத்தில் கேன்டர்பரி அணி வெற்றி பெற 2 ஓவர்களில் 95 ரன்கள் தேவைப்பட்டது. எப்படியாவது விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில், வெலிங்டன் கேப்டன் இர்வின் மேக்ஸ்வெல், பகுதிநேர பந்துவீச்சாளர் பெர்ட் வான்ஸிடம் பந்தைக் கொடுத்தார். பேட்ஸ்மேன்களை அதிரடியாக ஆடத் தூண்டி விக்கெட்டுகளை வீழ்த்துவதே அவரது திட்டமாக இருந்தது.
4, 6+nb, 6+nb, 6, 1, 6, 6, 6
43-run over ✔️
List A world record ✔️
Congratulations Joe Carter and Brett Hampton!#ndtogether #cricketnation pic.twitter.com/Kw1xgdP2Lg— Northern Districts (@ndcricket) November 7, 2018
ஆனால், அந்தத் திட்டம் விபரீதமானது. அந்த ஓவரில் பெர்ட் வான்ஸ் வரிசையாக 17 நோ-பால்களை வீசினார். இதைப் பயன்படுத்திக் கொண்ட பேட்ஸ்மேன் லீ ஜெர்மன் பந்துகளைச் சிக்சர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறக்கவிட்டார். அந்த ஒரு ஓவரில் மட்டும் மொத்தம் 22 பந்துகள் வீசப்பட்டன. அதில் 8 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் விளாசப்பட்டன.
லீ ஜெர்மன் மட்டும் தனி ஆளாக 70 ரன்கள் குவித்தார். இறுதியில் அந்த ஒரு ஓவரில் மட்டும் 77 ரன்கள் எடுக்கப்பட்டது. இந்தத் திருப்புமுனையால் வெற்றிக்கு அருகில் வந்த கேன்டர்பரி அணி, கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்கத் தவறியதால் போட்டி டிராவில் முடிந்தது. கிரிக்கெட் வரலாற்றில் இன்றுவரை முறியடிக்க முடியாத, மிகவும் விசித்திரமான மற்றும் விலை உயர்ந்த ஓவராக இது கருதப்படுகிறது.
