‘நடிகர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான காவலா  சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது என்றே சொல்லாம். ஏனெனில் தமன்னாவின் குத்தாட்டம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் கலாநிதி மாறன், “உண்மைய சொல்லனும்னா நான் இன்னும் ஜெயிலர் பார்க்கல. ஆனா, படம் பார்த்த அத்தன பேரும் படம் சூப்பர்னு சொல்லிட்டாங்க. ரஜினி சாருக்கு இப்போ 72 வயசு ஆகுது. இன்னும் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிக்குறாங்க. அதே மாதிரி உங்களுக்கும் நின்னா நீங்களும் சொல்லுங்க நான் அடுத்த சூப்பர் ஸ்டார்னு, அது வரைக்கும் இந்திய திரையுலகிலே ரஜினி சார் மட்டும் தான் சூப்பர் ஸ்டார். இது தான் உண்மை” என்றார்.