தென்கொரியா அமெரிக்கா கூட்டணி இன்றுடன் 70 ஆண்டுகளை நிறைவடைந்த நிலையில் அமெரிக்கா  USS  அனபோலிஸ் எனும் இரண்டாவது நீர்மூழ்கி கப்பலை தென்கொரியாவுக்கு அனுப்பியுள்ளது. ஏற்கனவே USS கென்டுக்கி எனும் நீர்மூழ்கிக் கப்பலை தென் கொரியா கடற் பகுதியில் நிறுத்தியதற்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் இரண்டாவது கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு நிலைப்பாட்டை வலுப்படுத்த இரண்டு நாட்டின் கடல் படைகளும் திட்டமிட்டுள்ளது என்று தென்கொரிய கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.