உலக நாடுகள் பல பொருளாதார தடைகளை விதித்த பிறகும் வடகொரியா ஏவுகணை சோதனை மேற்கொள்வதை கைவிடவில்லை. இதனால் கொரிய தீபகற்பத்தில் எந்த நேரமும் போர் சூழல் நிலவுகிறது. அமெரிக்கா, தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வடகொரியா ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருவது வழக்கம்.

இந்த சூழலில் அமெரிக்கா தென்கொரியாவிற்கு ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் நீர்முழ்கி கப்பலை அனுப்பி வைத்தது. இந்நிலையில் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை கடலில் செலுத்தி சோதனை மேற்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.