பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது அதிக சொத்து சேர்த்ததாகவும் ஊழலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது வழக்கு போடப்பட்டது. இதற்காக இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் இம்ரான் ஆஜராக  வந்த போது அவரை அதிரடியாக பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படை கைது செய்தது.

இது சர்ச்சையை  ஏற்படுத்திய நிலையில் இம்ரான் கான் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் தேர்தல் ஊழலுக்காக தேர்தல் ஆணையம் சார்பில் இம்ரான் கானுக்கு சமன் அனுப்பி இருந்தது. இது தொடர்பாக தற்போது ஜாமினில் வெளியில் வர முடியாத பிடிவாரண்ட் இம்ரான் கானுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளது.