அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில், 7 வயது சிறுவன் ஒருவன் அவனது பெற்றோரின் தீவிர அலட்சியம் மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் 117 கிலோ உடல் எடையை எட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மேலும் பேசும் திறன் இல்லாத அந்தச் சிறுவனுக்கு முறையான சத்தான உணவுகளை வழங்காமல், அளவுக்கு அதிகமாக உணவளித்து அவனது பெற்றோர் அடைத்து வைத்துள்ளனர். இதன் காரணமாக உடல் எடை அதிகரித்து, படுக்கையிலேயே நகரக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட அந்தச் சிறுவன், உடல்நலக் குறைபாட்டால் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து, அவனது பெற்றோரை போலீசார் உடனடியாகக் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்கள் மீது குழந்தையைத் சித்திரவதை செய்தல், வன்கொடுமை மற்றும் இரண்டாம் நிலை கொலைக் குற்றம் ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு குழந்தைக்குத் தேவையான மருத்துவ உதவியையோ அல்லது முறையான உணவையோ தராமல், உடல் எடையை இந்த அளவிற்கு ஆபத்தான நிலைக்குக் கொண்டு சென்றதே அவனது மரணத்திற்கு முக்கியக் காரணம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.