கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஜம்கண்டி தாலுகாவில் ஒரு கொடூரமான கொலை நடந்துள்ளது. 40 வயதான யமனவ்வா என்ற பெண், 67 வயதான ஸ்ரீஷைல் பாட்டில் என்பவருடன் காதலில் இருந்துள்ளார். இந்நிலையில், யமனவ்வாவிற்கு வேறொரு இளைஞருடன் தொடர்பு இருப்பதாக ஸ்ரீஷைல் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

​ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற ஸ்ரீஷைல், யமனவ்வாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல், தான் கொலையே செய்யாதது போல பல நாடகங்களை ஆடியுள்ளார். ஆனால், காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தியபோது, ஸ்ரீஷைல் தான் கொலையாளி என்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.