2015 பெருமழைலையோடு ஒப்பிடும்போது இப்போ பெய்திருக்கிற மழை அதிகம். ஆனால் பாதிப்பு குறைவு. 2015ல் மழை குறைவாக இருந்தாலும்,  பாதிப்புகள் நிறைய என ஒப்பீடு செய்கிறார்கள். இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, உங்களுக்கு தெரியும் அல்லவா. 2015ல் எவ்வளவு மழை பெய்தது என்று உங்களுக்கு தெரியும். எங்களை விட நீங்கள்தான் களத்தில் இருக்கிறீர்கள்.

உங்களையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். உங்கள் டிவியை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எங்க எங்க தண்ணிக்குள்ள இருக்கிறீங்க.  எங்கெங்கெல்லாம் பேட்டி எடுக்குறீங்க.   மனசாட்சிப்படி ஊடக நண்பர்கள்,  பத்திரிக்கை நண்பர்கள் சொல்லுங்க. மூன்று நாட்கள் தொடர்மழை.  என்றைக்கும் இல்லாத அளவுக்கு 40 ஆண்டு காலம் இல்லாத அளவுக்கு 2015ல் கனமழை பெய்தது.

எங்கேயும் வெளியே போக முடியல. அதோடு புயல் வேகம் அதிகம். இதனால் ஆறு லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தது. மின்கம்பங்கள் எல்லாம் சாய்ந்து விட்டது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போகவே முடியாது. அப்படிப்பட்ட நிலைமையிலும் கூட மரங்களை எல்லாம் அப்புறப்படுத்தி,  மின் கம்பங்களை எல்லாம் சரி செய்து,  உடனுக்குடன் மின்சாரம் கொடுத்து,  மக்களுக்கு தேவையான உணவுகள் கொடுத்து, பால் கொடுத்து,  அவர்கள் தங்குவதற்கு முகாம் ஏற்பாடு செய்து,  மருத்துவ வசதி செய்து எல்லாமே செஞ்சது அண்ணா திமுக ஆட்சியில் தான்.

ஆனல்  இப்ப எதுவுமே கிடையாது. புயல் அடித்தது. ஆனால் பெரும் சேதம் கிடையாது.  பெருமளவுக்கு மரம் சேதம் கிடையாது. பத்திரிக்கையிலே பார்த்தேன் 340 மரம்தான் சாஞ்சி இருந்ததா சொன்னாங்க. 6 லட்சம் மரம் எங்கே ? 350 மரம் எங்க ? அண்ணா திமுக ஆட்சியில 2015ல் புயல் அடித்ததன் விளைவாக 6 லட்சம் மரம் சாய்ந்திருக்கிறது. இன்றைக்கு வெறும் 350 மரம் தான் சார்ந்து இருக்கிறது. சாலையிலே போக முடியாத ஒரு சூழ்நிலை சாலையிலே போக முடியாத ஒரு சூழ்நிலை. அப்படிப்பட்ட நிலைமையிலும் கூட அண்ணா திமுக அரசு வேகமா,  துரிதமா செயல்பட்டது.

2015 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்ததன் விளைவாக மக்களுடைய பாதிப்பை குறைத்து…. மக்களுடைய சிரமங்களை நாங்கள் குறைத்தோம்…. இன்னைக்கு அப்படி இல்ல. ஒரு வாரத்துக்கு முன்பாகவே மழை பொழியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…. ஆனால் இவங்க பொறுப்பெடுத்தவே இல்ல.  நான் முதலமைச்சராக இருக்கும் போது…  நான் செஞ்ச மாதிரி செஞ்சிருந்தா இந்த பிரச்சனைக்கே இடமில்லாமல் இருந்திருக்கும்.

எப்ப பார்த்தாலும் 4 ஆயிரம் கோடி திட்டம் செயல்படுத்துறோம்ன்னு சொல்றாங்க. இவரு 4000 கோடில செயல்படவில்லை. அண்ணா திமுக ஆட்சி இருக்கின்ற போது சென்னை மாநகரத்திற்கு இந்த திட்டத்தை தீட்டி அதன் மூலமாக  நாங்க செயல்படுத்தினோம். அதற்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சிக்கு வந்தவர்கள் இவர்கள் செயல்படுத்தினாங்க. இவங்க புதுசா எந்த திட்டத்தையும் கொண்டு வரல. ஏற்கனவே அனைத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்டது தான் இந்த திட்டம் என தெரிவித்தார்.