தமிழகத்தில் ராமேஸ்வரம் மற்றும் காசி ஆன்மீக பயணத் திட்டத்தில் இந்த வருடம் மேலும் 100 பேரை இணைத்து மொத்தம் 300 நபர்களை தமிழக அரசு தனது சொந்த செலவில் காசிக்கு அழைத்துச் செல்ல உள்ளது. இந்த வாய்ப்பை 60 வயதை கடந்த இறை நம்பிக்கை கொண்ட இந்து பக்தர்கள் பயன்படுத்திக்கொண்டு மண்டல இணை ஆணையர் அலுவலகம் அல்லது இந்து சமய அறநிலைய துறையின் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் இதற்கான செலவு 75 லட்சத்தை தமிழக அரசு ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.