தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு சட்ட மசோதாக்களுக்கும், அரசினுடைய பல்வேறு தீர்மானங்களுக்கும் ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பது இப்போதல்ல, ஆளுநர் ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து இரண்டு வருடங்களாக தமிழக அரசுக்கும்,  ஆளுநருக்கு இடையான அந்த கருத்து மோதல்  தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இப்போ அடுத்த கட்டங்களாக இன்னும்இந்த மோதல் உச்சத்தை எட்டி இருக்கின்றது.

ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்கள் மற்றும் தமிழக அரசு உத்தரவுகளுக்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போடுவதாக ஆளுநர் மீது தமிழக அரசு குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 13-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை, அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலவரம்பை நிர்ணயிக்க வேண்டும். ஆளுநர் ஒவ்வொரு மசோதாவையும் கிடப்பில் போட்டு காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார். அதனால் இந்த கால நேரத்திற்குள் அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் இல்லை என்றால் ? அதற்கான முடிவு என்ன என்பதை சொல்ல வேண்டும் இதையெல்லாம் வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள் .