தமிழக அரசு ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. பல்வேறு சட்ட மசோதா நிறைவேற்றி அனுப்பினால் ஆறு மாதமோ அல்லது மூன்று மாதமோ அல்லது குறிப்பிட்ட காலவரம்பு எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு பதில் சொல்லுங்கள் அல்லது நிறைவேற்றிக் கொடுங்கள்.

எந்தவித காரணம் சொல்லாமல் நீண்ட நாட்களாக நிலுவையிலே இருப்பதால் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்படுகின்றன என தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு அனுப்பி உள்ள மசோதாக்களை ஒப்புதல் வழங்காத ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த வழக்கு என்பது தொடரப்பட்டிருப்பதாக தெரிகிறது.  ஏற்கனவே கவர்னர்கள் ஒரு குறிப்பிட்ட காலவரம்புக்குள் மசோதாக்கள் மீது உரிய ஒப்புதல் செய்து அனுப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் சொல்லப்படுகிறது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

பல்வேறு மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதல் இன்றி கிடப்பில் உள்ளது என்பதையும் தமிழக அரசு சுட்டிக்காட்டி உள்ளது. பல்வேறு  பல்கலைக்கழக மசோதாக்கள், பொதுப் பட்டியலில் இருக்கக்கூடிய கல்வி சார்ந்த விஷயத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.  அண்ணா பல்கலைக்கழக சட்ட மசோதா,  மெட்ராஸ் யூனிவர்சிட்டி சட்ட மசோதா,  தமிழ்நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமாக  சட்ட மசோதாக்கள்,  துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்க வேண்டும் போன்ற விதிகளை திருத்தம் செய்தத சட்ட மசோதா என பல கிடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.