தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்ட இடங்களில் கலந்தாய்வு மூலம் ஏறத்தாழ முழுமையாக நிரம்பினாலும் இடங்கள் ஒதுக்கீடு பெற்றவர்கள் கல்லூரியில் சேராததால் ஏற்படும் சில காலி இடங்களை நிரப்புவதற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இரண்டு அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் உட்பட மொத்தம் 206 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ள நிலையில் மாணவர் சேர்க்கை அவகாசம் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் பிடிஎஸ் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு அண்மையில் நடத்தப்பட்டது. இதில் இடங்களை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான அவகாசம் முடிந்த நிலையில் தற்போது அக்டோபர் 31ம் தேதி அதாவது இன்று மாலை 3 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.