ஆந்திராவைச் சேர்ந்த பெண்கள் ஒரு பேருந்தில் தமிழகத்தில் இருக்கும் கோவில்களுக்கு சுற்றுலா வந்தனர். அந்த பேருந்தை மது என்பவர் ஓட்டி சென்றார். அவர்கள் திருத்தணி, சேலம் வழியாக பழனிக்கு வந்தனர். இந்நிலையில் கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் ரங்கநாதபுரம் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பு சுவரை கடந்து அடுத்த சாலையின் குறுக்கே ஏறி நின்றது.

இந்த விபத்தில் சங்கீதா, சாந்தி, சந்தியா, அனு, வந்தனா, ரேணுகா ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.