ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கும் செப்டம்பர் 15 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தேர்வு தொடங்குவதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் பொது வினாத்தாள் முறையை அமல்படுத்த இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் வினாத்தாள் லீக் ஆவதை தடுப்பதற்காக ஒவ்வொரு பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறையில் இருந்து சீல் வைக்கப்பட்ட கவர் மூலமாக வினாத்தாள் கொண்டு செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பிரிண்டர் மற்றும் பேப்பர் பள்ளி கல்வித்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக முறையாக காலாண்டு தேர்வு நடத்தும்படி பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.