நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என் அன்புக்குரிய சொந்தங்கள்…. அருமை உடன்பிறந்தார்கள்…. நம் தாய்மொழி வாழ வேண்டும், மீள வேண்டும், வெல்ல வேண்டும் என்றால் ? தமிழன் அரியணையில் ஏறி ஆட்சி செய்யும் போது….. இப்போது தமிழ் மொழி  பயிற்று மொழியாக இல்ல, பாட மொழியாக  இல்ல,  வழிபாட்டு மொழியாக இல்ல,  நல்ல கவனிச்சுக்கோ…  வழக்காடு மொழியாகவும் இல்லை. ஆனால் தமிழில் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும் என்று அய்யா கருணாநிதி அவர்கள் சட்டம் இயற்றினார்கள்.

அந்த சட்டத்தை குடியரசு தலைவருக்கு முன் நகற்றினார்கள். அந்த குடியரசு தலைவர் ஒற்றை கையெழுத்தில்…  தமிழ் தேசிய இனத்தின் உரிமை உறங்கிட்டு இருக்கு. ஏற்கனவே நம்ம மட்டும் இல்ல…  ராஜஸ்தான்,  பீஹார்ல எல்லாம் அவன் தாய் மொழியில் தான் வாதிடுறான். அந்த உரிமையை எங்களுக்கு கொடுங்க… தமிழ்ல வாதிடுற உரிமை அப்படின்னு கேட்டோம்….  வழக்காடு மன்றத்தில்….  அதற்கு வழக்கறிஞர்கள் எல்லாரும் உண்ணாவிரதம் இருந்தாங்க… அதன் பிறகு தான் இந்த சட்டம் நிறைவேறியது.

ஆனால் இரண்டு குடியரசு தலைவர்களை இவர்களே தேர்வு செஞ்சாங்க… ஒன்னு பிரதீபா பாட்டில். இன்னொருத்தர் ஐயா பிரணாப் முகர்ஜி. இந்த ரெண்டு பேர்ல ஒருத்தர்கிட்ட அழுத்தம் கொடுத்து,  இந்த கையெழுத்தை போட்டு….  தமிழ்ல வழக்காடு உரிமை எங்களுக்கு கொடுங்கள் என்று பெற்று தந்திருக்க முடியுமா ? முடியாதா ? ஏனென்றால் இவங்கதான் அந்த குடியரசு தலைவரை தேர்வு செய்தார்கள். அப்ப எல்லாமே ஒரு வெற்று… ஒரு ஏமாற்று.

இஸ்லாமிய மக்கள் சிறுபான்மை…. கிறிஸ்துவ மக்கள் சிறுபான்மை என சொல்லுறவன் யாருன்னா…. அவன் மொழி சிறுபான்மை. அத நுட்பமாக கவனிச்சுக்கணும்.எம்ஜிஆர் ஒரு மொழி சிறுபான்மை, கருணாநிதி ஒரு மொழி சிறுபான்மை, ஜெயலலிதா ஒரு மொழி சிறுபான்மை. இவர்கள் மொழி சிறுபான்மையில் தான் கல்வி உரிமை, கல்லூரி, பள்ளிக்கூடம், எல்லாத்துக்கும் உரிமை பெற்றிருக்கான்.

நீ வேணா போய் பாத்துக்க… ஆனால் இவன்… மொழி சிறுபான்மை….  ஒரு தேசிய இனத்தின் மக்களை மத சிறுபான்மை என்ற சொல்வதை எப்படி ஏற்க முடியும் ? எப்படி ஏற்பது ? ஏனென்றால்… மதம் மாறிக்கொள்ள முடியும்..  மாறிக்கொள்ள கூடியது. ஆனால் மொழியும்,  இனமும் மாறிக்கொள்ள முடியாது.  என் தம்பி யுவன் சங்கர் ராஜா இன்னைக்கு இஸ்லாத்தை ஏற்று இருக்கிறான்…. அவன் சார்ந்திருந்த மதத்தில் இருந்து இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டான்… மதம் மாறிக் கொண்டான்.

ஆனால் அவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை அவன் தமிழன். தமிழ் மொழிக்கு சொந்தக்காரன் என்பதை மாற்ற முடியாது. அதேதான் ஏ ஆர் ரகுமானுக்கும்..  அதை நன்கு புரிந்து கொள்ளனும். எங்க அண்ணன் பழனி பாபா இஸ்லாமியத்தை ஏற்றுக் கொண்டார். தமிழ் இன உணர்வு கொள்ளாதே…. இன வெறிக் கொள். இல்லை என்றால் ?  நீ ஆளப்படுவாய்,  ஒருபோதும் ஆள மாட்டாய் என்ற முழக்கம் இருக்கு வலையொலியில தட்டிப்பார்.

எங்க தாத்தா காகிதமில்லத் எனக்கு நேரே படமாய் இருக்கார். அவர் இஸ்லாமியத்தை ஏற்றுக்கொண்டார். இந்திய மொழிகளில் ஆட்சி மொழி எது வர வேண்டும் என்று கருத்து பகிர்வு கூட்டம் நடைபெறுகின்ற போது…  இந்திய மொழிகளில் தொன்மையான மொழி எதுவோ, அதுதான் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.  அப்போ ஒரு பெரியவர் எழுந்து சொல்கிறார்…  இந்திய மொழிகளில் மிக தொன்மையான மொழி ஆட்சி மொழியாக வர வேண்டுமென்றால் ? தமிழ் தான் வர வேண்டும்.

தமிழ் தான் இந்திய மொழிகளில் மிக மிக மூத்த மொழி, தொன்மையான மொழி. அதை எந்த வரலாற்று ஆய்வறிஞனும், தொல்பொருள் ஆராய்ச்சியாளனும் மறுக்க முடியாது என்று பதிவு பண்ணி இருக்கான். அப்போது நேரு பெருமானார் அவர்கள்….  சாய்பு, நீங்கள் உருதை கேட்பீர்கள் என்றால் ? நீங்கள் தமிழை கேட்கிறீர்களே… ஏன்னா முஸ்லிம்னாவே அவனுக்கு உருது பேசுற முஸ்லிம் தான். அப்போ நம் தாத்தா முன்வைத்த முழக்கம்…  அன்பு தம்பி – தங்கைகளே….  நான் அல்லாஹ் என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன்…  இஸ்லாம் எங்கள் வழி,  இன்பத் தமிழே எங்கள் மொழி என்ற முழக்கத்தை முன் வைத்தவர்.

ஏன் ? மதம் மாறிக் கொள்ள முடியுது. மொழியும் – இனமும் மாறிக்கொள்ள முடியாது. அதனால நீ… மொழி சிறுபான்மை நீ… என்னை மத சிறுபான்மை என்று சொல்வதை நிப்பாட்டு. நீ எனக்கு இட ஒதுக்கீடு கொடுத்தோம் என்று சொல்லாதே…  நீ இருக்கிற இடமே நான் போட்ட பிச்சை,  நான் போட்டது உனக்கு. மொத்த இடமும் என்னது….  நீ யாருடா எனக்கு இட ஒதுக்கீடு கொடுக்க ? இடம் என்னது டா…  எண்ணி குடுத்தியா ?  எடுத்து குடுத்தியா டா ? அள்ளி கொடுத்தியா ? அளந்து கொடுத்தியா ?  அளந்து கொடு… எடுத்துக் கொடுக்காத… எண்ணி கொடு…. ஒரு நாள் மொத்தமாக இந்த நிலத்தின் அரசியலை மாற்றி…. புரட்டிப் போடல நான் பிரபாகரன் பிள்ளை இல்லடா… எழுதி வச்சுக்க என சூளுரைத்தார்.