திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே ஒரு 14 வயது சிறுமி கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக உயிரிழந்துவிட்டார். இந்த சிறுமிக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடலை புதைத்து விட்ட நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் படி போலீசார் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அந்தப் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிறுமியின் தாத்தா தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமியின் தாத்தாவை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.