கர்நாடக மாநிலம் கோரகிரி பகுதியைச் சேர்ந்தவர் நவீன்(27). இவர் காய்கறி கடையில் வேலை பார்க்கிறார். இவர் கீதா(20) என்ற பெண்ணுடன் சோசியல் மீடியா மூலம் பழகி காதலித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் மகன் உள்ளார்.
சமீப காலமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையான நவீனுக்கும் கீதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளத. அவர்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வைத்துள்ளனர்.
குடும்பப் பிரச்சனையால் மகன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கீதா தனது மகனை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்த நவீனுக்கும் கீதாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபத்தில் நவீன் கீதாவின் கழுத்து, முகம், வயிறு, மார்பு என பல்வேறு இடங்களில் கத்தியால் சுமார் 20 முறை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கீதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நவீனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
