தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,  சென்னை டி. நகர் பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தபோது, மாலை 6 மணியளவில் திடீரென அதனை ரத்து செய்துவிட்டுத் திரும்பியது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

“6 மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது”, “பயந்து போய் சென்றுவிட்டார்” எனப் பலரும் கிண்டல் செய்து வரும் நிலையில், நடிகர் கூல் சுரேஷ் இதற்கு ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார். “எங்க அண்ணன் அப்படிப்பட்டவர் இல்லை” எனத் தனது பேச்சைத் தொடங்கிய அவர், சுட்டெரிக்கும் வெயிலில் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதால் விஜய் சார் மிகுந்த களைப்பில் இருப்பார் என்றும், அவரது உடல் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும் என்றும் விளக்கமளித்தார்.

“>

 

மேலும், “கூட்டத்தில் சிலர் தர்பூசணி மற்றும் குளிர்பானங்களைத் தூக்கி எறிவதைப் பார்த்திருப்பீர்கள்; அத்தனை நெருக்கடிக்கு மத்தியிலும் அவர் மக்களுக்காகப் பணியாற்றி வருகிறார். தயவுசெய்து அவரது நேர்மையான முயற்சியைத் தவறாகச் சித்தரிக்காதீர்கள்” என்று கண்கலங்கியபடி கூல் சுரேஷ் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.