ஈரான் நடத்திய அதிரடித் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டுவிட்டதாக உலகமெங்கும் வதந்திகள் பரவி வரும் நிலையில், அவரது மகன் யாயிர் நெதன்யாகு (Yair Netanyahu) சமூக வலைதளங்களில் இருந்து திடீரென மாயமாகியுள்ளது இந்தச் சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்துத் தொடர்ந்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டு வந்த யாயிர், கடந்த மார்ச் 9-ம் தேதிக்குப் பிறகு எந்தவொரு பதிவையும் போடவில்லை. ஒரு நாட்டின் பிரதமரின் மரணம் குறித்த செய்திகள் இவ்வளவு தீவிரமாகப் பேசப்படும்போது, அவரது மகன் மௌனமாக இருப்பது சர்வதேச ஊடகங்களிடையே பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதற்கிடையில், யாயிர் நெதன்யாகு உயிருக்கு அஞ்சி அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகச் சில தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறுகையில், “யாயிர் இப்போது அமெரிக்காவுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்; அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது” எனப் பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒருபுறம் நெதன்யாகுவின் 6 விரல் மர்ம வீடியோ, மறுபுறம் அவரது மகனின் மர்ம மௌனம் என இஸ்ரேல் அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் இந்தச் சம்பவங்கள், ஏதோ ஒரு பெரிய உண்மை மறைக்கப்படுகிறதோ என்ற அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் விதைத்துள்ளது.
