சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் ஆறாம் வகுப்பு முதல் பாலிடெக்னிக் வரை இலவச கல்வி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற உள்ளது. பெற்றோரை இழந்து வறுமையில் உள்ள ஆண் மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் இலவச கல்வி வழங்கப்படுகிறது.

ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆறாம் வகுப்பு தமிழ் வழியில் ராமகிருஷ்ண மிஷன் உறைவிட பள்ளியில் படிக்கலாம். அதனைப் போலவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரலாம். பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரலாம் என்றும் விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.