அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த போதிலும் அதை தற்காலிக முடிவு தான் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருகிறார்கள். அதன் பிறகு அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்று கருதும் ஓ. பன்னீர்செல்வம் வருகின்ற 24-ஆம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை நடத்த இருக்கிறார். இந்த முப்பெரும் விழா மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என தற்போது தொண்டர்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்சியில் உள்ள ஜி கார்னர் மைதானத்தில் வருகின்ற 24-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும் கழகத்தின் பொன்விழா ஆண்டு என முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. இந்த முப்பெரும் விழாவில் தொடர்கள் அனைவரும் வந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும் ஓபிஎஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முன்னதாக திருச்சியில் நடைபெறும் முப்பெரும் விழா மாநாட்டில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என ஓ. பன்னீர்செல்வம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.