கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு நீதிமன்றம் 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கோழிக்கோடு மாவட்டம் நொச்சாடு முளியங்கள் பகுதியைச் சேர்ந்த முகமது ரைகான் என்ற தொழிலாளி, கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
மேலும் அங்கிருந்த சிறுமியைக் கொடுமைப்படுத்தியுள்ளார், பேராம்பிரா போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாதாபுரம் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் கே.மேனன், 13 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் முகமது ரைகான் குற்றவாளி என்பதை உறுதி செய்தார். அவருக்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2.10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
