குற்றச்செயல்களை தடுக்கவும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்டறியவும் சென்னையில் 16 இடங்களில் கடந்த ஆண்டு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இந்நிலையில் மேலும் 50 இடங்களில் 200 கேமராக்களை பொருத்த திட்டமிட்டுள்ளது.

இது போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்களை கண்டறிவதுடன், திருட்டுப் போன வாகனங்களையும் கண்டறிந்து அருகில் உள்ள காவல்துறைக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கும். மேலும் திருடப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி செயின் பறிப்பு, கொள்ளை, கொலை சம்பவங்கள் நடத்தப்படுவதால் இந்த கேமராக்கள் அதனை தடுக்க உதவியாக அமையும் என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.