சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ராபர்ட் கென்னடி என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக கடிகாரத்தை சேகரித்து வருகிறார். இவர் இங்கிலாந்து, ஜெர்மன், அமெரிக்கா என பல நாடுகளை சேர்ந்த பழமைவாய்ந்த 2,000 கடிகாரங்களை சேகரித்து வைத்துள்ளார். இவரது இந்த முயற்சியை அங்கீகரித்து கின்னஸ் சாதனை சான்றிதழை வழங்கி கின்னஸ் அமைப்பு கௌரவித்துள்ளது.
கம்ப்யூட்டர் சார்ந்த தொழிலை செய்து வரக்கூடிய இவர், அடிப்படையில் பழமை விரும்பி கடிகாரச் சேகரிப்பாளர் ஆனார். தினசரி 2 மணிநேரம் கடிகாரங்களுடன் அவர் செலவிடுவாராம். அவரிடம் உள்ள கடிகாரங்கள் அனைத்துமே சாவி கொடுத்தால் மட்டுமே இயங்கும். கடிகாரம் ஒவ்வொன்றும் குறைந்தது 150 வருடங்களுக்கு முந்தையவை ஆகும்