செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, அமைச்சர் ஒருவர் மீது குற்றச்சாட்டு வருகிறது என்றால் அவரை விசாரிக்க தான் செய்வார்கள். அம்மாவையும் கைது செய்தார்கள் என்னை கூட தான் கைது செய்து பெங்களூர் சிறையில் போட்டாங்க. நான் அதற்கு பயந்தேனா. காலை 10:30 மணிக்கு எனக்கு 4 ஆண்டு சிறை தண்டனை அறிவித்தார்கள். அடுத்து ஐந்தாவது நிமிடம் ஒரு புதிய அரசை அமைத்துவிட்டு ஜெயிலுக்கு சென்றவள் நான். கைது என்று சொன்ன உடனே நான் பயந்து ஓடிப்போய் கதவை சாத்திக் கொள்ளவில்லை. வண்டியில் படுத்துக்கொண்டு நெஞ்சை பிடித்துக்கொண்டு அழவில்லை.

ஐந்து மாதம் சிறையில் என்னை வைத்து எனக்கு சோப்பு தண்ணீர் கொடுத்தாங்க. ஐந்து மாசமும் சிறையில் சோப்பு தண்ணீர் தான் குடித்தேன். நான் அதையும் குடித்து உயிர் வாழ்ந்து விட்டு இருந்தேன். இதெல்லாம் திமுக ஆட்சியில் தானே நடந்தது. நீங்க தானே நடத்துனீங்க. அப்போ உங்களுக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயமா? அமைச்சரை விசாரிக்க சென்ற மத்திய அரசு அதிகாரிகளை ஆள் வைத்து அடிக்கிறீர்கள் .மக்களுக்கு நீங்கள் என்ன சொல்லிக் கொடுக்கிறீர்கள்? ஏதாவது பிரச்சனைக்கு நாளைக்கு காவல்துறை சாதாரண மக்கள் வீட்டிற்கு சென்றால் அவர்களை அடிக்க சொல்லிக் கொடுக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு சட்டம் பொதுமக்களுக்கு ஒரு சட்டமா என்று பேசியுள்ளார்.