இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு தகுதியான மாணவர்களுடைய விண்ணப்பங்களை போக்குவரத்து துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்  ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு பஸ் பாஸ் இணைய வழியே வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாணவர்களுடைய நலன் கருதி நடப்பாண்டு மட்டும்  நேரடியாக அட்டையை பெறும் பழைய நடைமுறையை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இலவச பஸ் பாஸ் பெற மாணவ மாணவிகளின் புகைப்படத்தை உடன் கூடிய விண்ணப்பத்தை பள்ளி தலைமை ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டல போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் உடனே சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.