கனடாவின் போர்ட் கோக்விடலாம் பகுதியில் பன்றி பண்ணை நடத்தி வந்த ராபர்ட் பிக்டன் (71) என்பவர் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை செய்தபோது ஃப்ரிட்ஜில் ஒரு பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், சுமார் 49 பெண்களை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி தனது பண்ணையில் உள்ள பன்றிகளுக்கு இணையாக போட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் ஆயுள் கைதியாக சிறையில் இருந்த அவரை சிறை கைதி ஒருவர் கடந்த 19 ஆம் தேதி தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்