துருக்கி மற்றும் சிரியாவில் சென்ற 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரையிலும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.மேலும் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் துருக்கி, சிரியா ஆகிய நாடுகள் அதிர்ந்து போயுள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இடிபாட்டில் 45 மணி நேரமாக சிக்கிய சிரியாவை சேர்ந்த சிறுவனை கண்டறிந்த மீட்புபடையினர் பசிக்கு தண்ணீர் கொடுத்தனர்.