பெரு நாட்டில் எச்5என்1 வகை பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதனால் பாதுகாக்கப்பட்ட ஏழு கடல்வாழ் பகுதிகளிலிருந்து 585 கடற் சிங்கங்களும் எட்டு கடலோரப் பகுதிகளில் இருந்து 55 ஆயிரம் உயிரிழந்த பறவைகளும் கண்டறியப்பட்டுள்ளதாகசெர்னான் என்ற இயற்கை பகுதிகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த பறவைகளில் பெலிகான்கள், கடற் பறவைகள் மற்றும் பெண்குயின்களும் அடங்கும். இது குறித்து மருத்துவர்கள் ஆய்வக பரிசோதனை செய்துள்ளனர்.

இந்த பரிசோதனையில் கடற் சிங்கங்களில் எச்5என்1 வகை பறவை காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் உயிர் சூழல் பாதுகாப்பு ஒழுங்கு விதிமுறைகளை அறிவித்துள்ளனர். அந்த விதிமுறைகள் யாதெனில் கடற்கரையில் கடற் சிங்கங்களுடனும் கடல் பறவைகளுடனும் செல்லப்பிராணிகளை தொடர்பு கொள்ள விட வேண்டாம் என பெரு நாட்டின் தேசிய மன மற்றும் வனவாழ் சேவை அமைப்பு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.