தபால் துறையில் மொத்தம் 44,228 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சமீபத்தில்  கால அவகாசம் முடிவடைந்தது. அந்த வேலைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தபால் துறை சார்பாக indiapostgdsonline.gov.in இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் வேலைக்கு விண்ணப்பித்த போது அளித்த தகவலை ஆகஸ்ட் 8ஆம் தேதி இன்று வரை திருத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றே கடைசி நாள் ஆகும்.