வட மாநிலங்களில் கோடை வெயில் 43 டிகிரி செல்சியஸைத் தாண்டி தகித்து வரும் நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் பயணிகளைக் குளிரூட்ட ரயில்வே நிர்வாகம் ஒரு செம ஐடியாவை கையில் எடுத்துள்ளது.

பொதுவாக விவசாய நிலங்களில் தண்ணீரைத் தெளிக்கப் பயன்படுத்தப்படும் ‘ஸ்பிரிங்க்ளர்’ (Sprinkler) நுட்பத்தை, இங்கு பிளாட்பாரத்தின் மேற்கூரைகளில் பொருத்தி அசத்தியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by खगड़िया जंक्शन (@khagariajn)

இதன் மூலம் தண்ணீரின் மிகச்சிறிய துளிகள் பனிச்சாரல் போல பயணிகள் மீது தூவப்படுவதால், சுட்டெரிக்கும் வெயிலிலும் பிளாட்பாரம் முழுக்க ஜில்லென்று குளுமையான சூழல் நிலவுகிறது.

இந்த புதுமையான ஏற்பாட்டின் வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வரும் நிலையில், “ஸ்டேஷனுக்குள் நுழைந்தாலே சிம்லாவுக்குள் வந்தது போல இருக்கிறது” என பயணிகள் ரயில்வே நிர்வாகத்தைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தைக் குறைக்க இந்த வாட்டர் ஸ்பிரிங்க்ளர் சிஸ்டம் மட்டுமன்றி, பயணிகளுக்கு இலவசமாக ‘ஓஆர்எஸ்’ (ORS) பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.