தீபாவளியன்று லட்சுமி பூஜைக்கு பிறகு, மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள தகன மைதானக் காளி மாதா கோவிலில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இந்த கோயிலில் கடந்த 41 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு தனித்துவமான பாரம்பரியத்தின் கீழ், பிரசாதமாக இனிப்புகளுடன் பணமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு சிறப்பு பிரசாதம், லட்சுமி பூஜைக்குப் பிறகு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பக்தர்கள் அதிகளவில் திரண்டதால், தரிசனம் மற்றும் பிரசாத விநியோகம் இரவு முழுவதும் நடைபெற்றது. நீண்ட வரிசைகளில் காத்திருந்த பக்தர்கள், இந்த புண்ணிய வாய்ப்பைப் பெறும் எண்ணத்தில் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
ऐसा मंदिर जहां बंटता है ‘पैसों का प्रसाद’
लक्ष्मी पूजा के बाद अमरावती के मंदिर में पैसों का प्रसाद बांटा गया, प्रसाद लेने के लिए लंबी लाइनें लगीं #MahaarashtraNews pic.twitter.com/KoqgzCvDwK
— NDTV India (@ndtvindia) October 22, 2025
“>
இந்த பாரம்பரியம் 1984ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கோயிலின் பூசாரியாக உள்ள சக்தி மகாராஜ் இதுகுறித்து கூறுகையில், “இந்த கோயிலிலிருந்து பெறப்படும் பணப் பிரசாதத்தை வீட்டில் அல்லது கடையில் பாதுகாப்பாக வைத்தால், லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும்; செழிப்பு பெருகும் என நம்பப்படுகிறது,” என்றார்.
இதனால், இந்த விசேஷமான பிரசாதத்தைப் பெற பக்தர்கள் இரவு வரை காத்திருந்தனர். திருவிழாவை ஒட்டி நடைபெற்ற இந்த பணப் பிரசாத விநியோகம், பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது
