அல்ஜீரியா நாட்டிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று இரண்டரை மணி நேர பயணத்திற்கு பிறகு பிரான்ஸ் நாட்டில் தரை இறங்கியது. தரை இறங்கிய விமானத்தில் தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொண்ட போது விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து இருந்து பயணித்த இளைஞரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டுள்ளனர்.

40,000 அடி வரை உயரத்தில் பறக்கும் விமானத்தில் சக்கரத்தில் ஒளிந்து பயணிப்பதால் -50 முதல் -60 செலுசியஸ் வெப்பநிலையில் அதிகப்படியான குளிரால் பாதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.