ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.5 ரிக்டர் முதல் 7.6 ரிக்டர் வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆழி பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள் அதிர்ந்ததால் வீடுகளில் இருந்து வீதிகளில் ஜப்பான் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். ஹோன்ஸூ அருகே 13 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டோக்கியோ, காண்டோ உள்ளிட்ட நகரங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது

இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இஷிகாவா, நிகாடா, டொயாமா, யமாகாடா, ஹுயொகோ உள்ளிட்ட இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பலாம் என மிக அதிக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் விரைவாக வெளியேற வேண்டும் என ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2004 இல் இந்தோனேசியா அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவில் சுனாமி தாக்கி ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்தனர்.

https://twitter.com/RonEng1ish/status/1741726461914915256