அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் குழந்தைகள் பிறப்பு வினாடிக்கு 4.3 ஆகவும் இறப்பு இரண்டாகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 7 கோடி 50 லட்சம் பேர் மக்கள் தொகையில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.