மத்திய பிரதேசம் மாநிலம் கங்காப்பூரில் கோலோகோதரம் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது இந்த ஆசிரமத்தின் சீடர்கள் மூன்று பேர் உலக நன்மை வேண்டியும், கொடிய நோய் மீண்டும் பரவக் கூடாது என்பதற்காகவும் ஊர்ந்து சென்ற படி ராமேஸ்வரம் வரை யாத்திரை செல்ல முடிவெடுத்தனர். அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ஆம் தேதி கங்கோதரி பகுதியில் இருந்து இவர்கள் யாத்திரை தொடங்கியது. மூன்று பேரும் சாலையில் தெர்மாகோல் சீட் மீது படுத்து ஊர்ந்த படி ராமேஸ்வரம் நோக்கி செல்கின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதிக்கு வந்த அவர்கள் கூறியதாவது, உலக நன்மைக்காகவும் கொரோனா தாக்கத்திலிருந்து அனைவரும் விடுபடவும் சாஸ்தான நமஸ்காரம் யோக கல்யாண யாத்திரையாக செல்கின்றோம். உத்தரகாண்ட் மாநிலம் கங்கோதரி முதல் ராமேஸ்வரம் வரை 4000 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையில் தெர்மாகோல் போட்டு படுத்து எழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு செல்கிறோம் என தெரிவித்தனர். அவர்கள் ஊர்ந்து சென்றதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.