தபால் நிலையங்கள், வங்கிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மக்களுக்கு சேமிப்பு திட்டத்தை வழங்குகிறது. அதிலும் தபால் நிலையத்தில் அமலில் இருக்கும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் 15 வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு 7% வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் அல்லது மாதத்திற்கு சுமார் 12,500 முதலீடு செய்யலாம். அப்படி முதலீடு செய்தால் சில லட்சங்கள் வரை வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
12,500 முதலீடு செய்யும் நண்பர்களுக்கு 7.1% வட்டி விகிதத்தில் சுமார் 40 லட்ச ரூபாய் கொடுக்கப்படுகிறது. 15 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு 22.5 லட்சமாக இருக்கும். அதே நேரத்தில் முதலீட்டுக்கான வட்டி 18.18 லட்சமாக இருக்கும். 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் இந்த திட்டத்தில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். வருமான வரி சட்டத்தில் 80 சி பிரிவின் கீழ் இந்த திட்டத்தின் முதலீட்டாளர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்படுகிறது