துருக்கியுடன் நீண்ட காலம் நீடித்த மோதலுக்கு பிறகு, சமாதான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈராக்கிய குர்திஷ் பிரிவினைவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அமைதிக்காக முன்னேறி வருகின்றனர்.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை வடக்கு ஈராக்கில் நடைபெற்ற ஒரு அடையாள விழாவில், ஆயிரக்கணக்கான போராளிகள் தங்கள் ஆயுதங்களை மொத்தமாக ஒப்படைத்து அங்கணமே எரித்து அழித்தனர். இது அந்த பகுதியின் நிலையான சமாதானத்திற்கு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

இந்த சமாதான முயற்சிக்கு முக்கிய காரணியாக, குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) நிறுவனர் அப்துல்லா ஓகலன் வெளியிட்ட அழைப்பு குறிப்பிடத்தக்கது. சிறையில் இருக்கும் அவரே, கடந்த பிப்ரவரியில், ஆயுதங்களை விட்டு அமைப்பைக் கலைக்க வேண்டும் என தனது ஆதரவாளர்களுக்கு தெரிவித்திருந்தார்.
Thirty Kurdistan Workers Party militants, half of them women, burned their AK-47 assault rifles, bandoliers and other guns in northern Iraq, marking a symbolic step toward ending a decades-long insurgency against Turkey https://t.co/bMF3OaTKo3 pic.twitter.com/3iIrorNi6v
— Reuters (@Reuters) July 11, 2025
“>
தற்போது 75 வயதான அவர், 1999-ம் ஆண்டு முதல் துருக்கிய சிறையில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அவரது விடுதலையும் துருக்கிய அரசு பரிசீலனை செய்யும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக, 40,000-க்கும் அதிகமான உயிர்கள் பலியான இந்த துருக்கிய-குர்திஷ் மோதல், தற்போது முடிவுக்கு வரக்கூடிய நிலையில் இருக்கிறது. இந்த அமைதி முயற்சி, மத்திய கிழக்கு பகுதிகளில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது. ஒப்பந்தம் வெற்றிகரமாக அமையக்கூடிய சூழ்நிலைக்கு இது நல்ல முன்னோடியாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படியுள்ளது.
