தேனி மாவட்டத்தில் அரசு பேருந்து 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை விஜயன் என்பவர் ஓட்டி சென்றார். இந்த நிலையில் திடீரென விஜயனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் சுதாரித்துக் கொண்ட விஜயன் சாலை ஓரம் பேருந்தை நிறுத்திவிட்டு மயக்கம் அடைந்தார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்ற செந்தில் என்பவர் அந்த பேருந்தை ஓட்டி விஜயனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். சரியான நேரத்தில் விஜயனை மருத்துவமனையில் அனுமதித்து அவரது உயிரை காப்பாற்றிய செந்திலுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.