நெய்வேலியில் திமுக எம்எல்ஏ சபா ராஜேந்திரன் மகன் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் இதில் முதல்வர் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய நிலையில் அப்போது பேசிய அவர், நம்முடைய நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும். ஆகவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் இருக்கின்ற 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.