தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவின் பங்கு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. சமீபத்தில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பி.எல். சந்தோஷ், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் தமிழகத்தில் NDA கூட்டணியின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும் என்று அதிரடியாகப் பேசியுள்ளார். குறிப்பாக, வரும் தேர்தலில் பாஜக 40 தொகுதிகளை உறுதியாகக் கேட்டுப் பெறும் என்றும், அந்த இடங்களுக்குத் தகுதியான பலத்துடன் கட்சி தயாராக வேண்டும் என்றும் அவர் கட்டளையிட்டுள்ளார். இது அதிமுக தரப்பிற்கு ஒரு மிகப்பெரிய “அதிர்ச்சி வைத்தியமாக” பார்க்கப்படுகிறது.
மேலும் ஒரு படி மேலே போய், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜகவிற்குத் துணை முதல்வர் பதவி கிடைப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கேற்ப சீட் பங்கீட்டின் போதே பாஜக தனது வலிமையை நிரூபிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தும் என அவர் கூறியுள்ளார். அதிமுக தலைமையிலான அணியில் இருந்துகொண்டே இப்படி ஒரு “பவர்ஃபுல்” கோரிக்கையை பாஜக முன்வைத்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.
